அலைமருவி சமிக்ஞை தொலைக்காட்சி ஒளிபரப்பு முறைமையை (Analog Terrestrial System) இயக்குவதற்கானஅனுமதிப்பத்திரம் வழங்கும் செயன்முறை இடைநிறுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கையில் தற்போது இயங்கிவரும் அலைமருவி சமிக்ஞை ஒளிபரப்பு முறைமை மூலம் தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒளிபரப்புவதற்காக தற்போது 16 நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
அதை பயன்படுத்தி 05 அரச தொலைக்காட்சி அலைவரிசைகள் உள்ளிட்ட 24 அலைவரிசைகள் நாட்டில் தற்போது காணப்படுகின்றன.
புதிய முறைமை
தற்போது தொலைக்காட்சி ஒளிபரப்புக்கள் வர்ண ஒளிர்மை அதிர்வெண் இயலளவை உயர்ந்தபட்சம் பயன்படுத்தி இயக்கப்படுவதுடன், 46 வருடங்கள் பழமையான அலைமருவி சமிக்ஞை ஒளிபரப்பு முறைமைக்குப் பதிலாக நவீன தொழில் நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது.
அதற்காக, இலங்கை அரசும் ஜப்பான் அரசும் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளதுடன், குறித்த வேலைத்திட்டத்தை 2029 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.
வேலைத்திட்டம் பூர்த்தியடைந்து 02 ஆண்டுகளுக்குப் பின்னர், பழைய அலைமருவி சமிக்ஞை தொலைக்காட்சி ஒளிபரப்பு முறைமை முழுமையாக நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

