சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.
தற்போது இவர் கைவசம் எஸ்.கே.23 மற்றும் பராசக்தி ஆகிய படங்கள் உள்ளன. இதில் சமீபத்தில் பராசக்தி படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளிவந்து அனைவரின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
சிம்புவின் STR 51 படத்தின் கதை இதுவா? காத்திருக்கும் வெறித்தனமான சம்பவம்
இந்த இரண்டு படங்களை முடித்தபின் இயக்குநர் சிபி சக்ரவத்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கப்போவதாக தகவல் வெளியானது.
விஜய் இடத்தில் சிவகார்த்திகேயனா?
GOAT படத்தில் விஜய் கடைசியாக அவர் கையில் இருக்கும் துப்பாக்கியை சிவாவிடம் கொடுத்து சென்ற காட்சி, அடுத்த விஜய் சிவகார்த்திகேயன் தான் என்று அவரது ரசிகர்கள் கூறும் அளவிற்கு ட்ரெண்ட் ஆனது.
இந்நிலையில், சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் ஒரு செயலை செய்திருக்கிறார்கள் அதாவது, தளபதி சிவகார்த்திகேயன் என்று போஸ்டர் அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதனை கண்ட சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இவ்வளவு ஸ்பீடாவா என்று ஜாலியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.