நீண்டகால பகை இன்று பெரும் கொலையில் முடிந்துள்ளது.இதன்படி வீடு புகுந்த குழுவொன்று மூவரை வெட்டி சாய்த்துள்ளது.அம்பலாந்தோட்டை(Ambalantota), மாமடல பகுதியில் இன்று (2)இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
6 பேர் கொண்ட குழுவொன்று வீடொன்றிற்குள் நுழைந்து அங்கிருந்த மூன்று பேரை வெட்டிக் கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நீண்டகாலமாக நிலவி வந்த பகை
இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததுடன் ஏனைய இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.
சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரிடையே நீண்டகாலமாக நிலவி வந்த பகையின் விளைவாக இந்தக் கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.