கண்டி புஸ்ஸல்லாவ பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், குறித்த குளவித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு நபர்கள் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, புஸ்ஸல்லாவ பகுதியில் வசிக்கும் சஸ்மிதன் திருச்செல்வம் என்ற மாணவனே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இவர், புஸ்ஸல்லாவ இந்து வித்தியாலயத்தில் ஆரம்பப் பிரிவில் கல்வி பயின்று வந்த மாணவர் ஆவார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

