முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நரித்தனமான அரசியலுக்கு துணை போனவருக்கே பாதுகாப்பு : கொந்தளித்த அரச்சுனா எம்.பி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) யாழ் விஜயத்தின் போது போராட்டமொன்றை நடத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna), வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் உள்ளிட்டவை அண்மையில் அழைப்பு விடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் போராட்டம் நடத்துவதை தடை செய்யக்கோரி காவல்துறையினர், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் கடந்த 29 ஆம் திகதி மனுதாக்கல் செய்திருந்தனர்.

இதனையடுத்து அர்ச்சுனா இராமநாதன், வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத் தலைவர், ஆர்ப்பாட்டக் குழுவின் யாழ் மாவட்ட தலைவர், தற்காலிக சுகாதார உத்தியோகத்தர் சங்க தலைவர் மற்றும் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் ஆகிய ஐவரை இன்றைய தினம் (30) நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில், இன்றைய தினம் (30) நீதிமன்றத்தில் முன்னிலையான அர்ச்சுனா இராமநாதன் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறான போராட்டமொன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், நான் யாழ் மக்களுக்கு ஆதவளிப்பதாகதான் தெரிவித்திருந்தேன்.

நான் போராட்டத்தை முன்னெடுக்க அழைப்பு விடுக்கவில்லை ஆனால் யாழிலுள்ள ஒரு யூடியூபர் தவறான அவதூறுகளை பரப்பியமையினால் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த யூடியூபருக்கு எதிராக நான் வழக்கு தாக்கல் செய்யவுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, நேற்றைய தினம் (29) அநுராதபுரம் காவல்துறையினரால், யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகராட்சி மன்றத்தில் வைத்து அர்ச்சுனா இராமநாதன் கைது செய்யப்பட்டிருந்தார்.

தனது வாகனத்தில் அங்கீகரிக்கப்படாத விஐபி விளக்குகளைப் பயன்படுத்தியதற்காக ரம்பேவ பகுதியில் வைத்து அர்ச்சுனா எம்.பி காவல்துறையினரால் வழி மறிக்கப்பட்டார்.

காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல் வற்புறுத்தல் மற்றும் கடமைக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அர்ச்சுனா இராமநாதன், “தற்போதைய அரசாங்கம் அரசியல் பழிவாங்களை மாத்திரமே மேற்கொண்டு வருகின்றது.

காரணம், எனக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை, என் பாதுகாப்பிற்காக விஐபி விளக்குகளை நான் பயன்படுத்தியமை தவறு என தெரிவிக்கின்றனர்.

ஆனால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு (M. A. Sumanthiran) இரு பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கப்பட்டிருந்தனர்.

தமிழரசுக் கட்சியை உடைத்தவரும் நரித்தனமான அரசியலுக்கு துணைபோனவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு எனக்கு மறுக்கப்படுகின்றது, இதை நினைத்து நான் மிகவும் வெட்கப்படுகின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.