இஸ்ரேல் (Israel) எல்லையில் ஹமாஸ் (Hamas) படைகள் நடத்திய தாக்குதலின் போது மிக மோசமான Hannibal Directive என்ற நடவடிக்கையை முன்னெடுத்ததாக முன்னாள் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் இறுதியில் ஒப்புக்கொண்டுள்ளார்.
இஸ்ரேலின் செய்தி ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த நேர்காணலின் போது கேலன்ட் உண்மையை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, Hannibal Directive என்பது சர்ச்சைக்குரிய கொடூர நடவடிக்கையாகும்.
ஹமாஸ் படைகள்
இந்த இராணுவ நடவடிக்கை என்பது, எதிரிகளின் கைகளில் சிக்காமல் இருக்க சொந்த மக்களையே பலி வாங்குவதாகும்
இந்த நடவடிக்கை சர்ச்சைக்குரியது என்பதுடன், உரிய அனுமதி பெறாமல் பல்வேறு மோதல்களில் உத்தியோகப்பூர்வமற்ற முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
2023 அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 1100 இஸ்ரேலிய பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் மீது அப்போது இஸ்ரேல் குற்றஞ்சாட்டியது.
ஆளில்லா விமான தாக்குால்
ஆனால் தற்போது முன்னாள் அமைச்சர் கேலன்ட் வெளிப்படுத்தியுள்ள தகவலின் அடிப்படையில், காஸா போருக்கு காரணம் தேடும் வகையில் சொந்த மக்களையே இஸ்ரேல் கொன்றுள்ளது அம்பலமாகியுள்ளது.
மேலும் , அக்டோபர் 7ம் திகதி தாக்குதலின் போது, இஸ்ரேலிய இராணுவம் ஹமாஸ் படைகளை குறிவைத்து ஆளில்லா விமான தாக்குால் நடாத்தியது.
மேலும், ஹமாஸ் படைகளிடம் சிக்கிய இஸ்ரேலிய மக்கள் மீதும் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஏற்கனவே ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையிலும் நோவா இசை விழாவில் கலந்துகொண்ட மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் ஹெலிகொப்டர் தாக்குதல் நடத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹசன் நஸ்ரல்லா படுகொலை
இதனிடையே, இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்திய சில நாட்களுக்குப் பிறகு, அக்டோபர் 11 ம் திகதி லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா படைகள் மீது ஒரு பெரிய தாக்குதலுக்கு தான் அழுத்தம் கொடுத்ததாகவும் கேலன்ட் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், இஸ்ரேலியப் படைகளுக்கு ஹிஸ்புல்லா கூட்டம் குறித்து உளவுத்துறை தகவல்கள் கிடைத்ததாகவும், அங்கு அவர்கள் ஹசன் நஸ்ரல்லா மற்றும் ஈரானிய அதிகாரிகள் உள்ளிட்ட உயர் தலைவர்களை குறிவைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஹமாஸ் படைகளுடனான போர் நிறுத்த நடவடிக்கைகளை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது அமைச்சரவையே காலதாமதம் செய்து வந்ததாக கேலன்ட் அம்பலப்படுத்தியுள்ளார்.
பணயக்கைதிகளை மீட்கும் எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்க நெதன்யாகு அரசாங்கம் தயங்கியதாகவும், பெரும்பாலான பணயக்கைதிகளை இஸ்ரேல் இராணுவமே கொன்றுள்ளதாகவும் கேலன்ட் வெளிப்படுத்தியுள்ளார்.
நீண்ட 16 மாதங்களாக இஸ்ரேல் முன்னெடுக்கும் போரில் இதுவரை கொல்லப்பட்ட பலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 48,000 என்றே கூறப்படுகிறது. ஆனால் 2 லட்சம் கடந்திருக்கலாம் என்றே சில மதிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன.