சம்பியன் கிண்ண தொடரில்(champions trophy) வங்கதேசத்திற்கு(bangladesh) எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி(new zealand team) வெற்றி பெற்றதால் அந்த தொடரிலிருந்து பாகிஸ்தான் அணி(pakistan) வெளியேறியது.
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று(24) வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில், நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
நியூஸிலாந்து அணி அபார வெற்றி
இந்தப் போட்டியில், வங்கதேச அணி முதலில் துடுப்பாட்டம் செய்து 9 விக்கெட் இழப்பிற்கு 236 ஓட்டங்கள் எடுத்தது. இதனை அடுத்து, 237 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி, 46.1வது ஓவரில் ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
அந்த அணியின் ரச்சின் ரவீந்தரா அபாரமாக துடுப்பெடுத்தாடி 112 ஓட்டங்கள் அடித்தார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரண்டு அணிகளே அரையிறுதிக்கு தகுதி பெற்று இருக்கும் நிலையில், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறின