கொழும்பிலிருந்து (Colombo) பொகவந்தலாவ நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் பயணித்த பயணி
ஒருவர் இரண்டு மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பொகவந்தலாவை
பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (09) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொகவந்தலாவ பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் வசிக்கும் 38 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்
சந்தேக நபர் போதைப்பொருள் கடத்தல் தொழிலில்
ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.