வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் வலி, சுமை மற்றும் வறுமை என அன்று தொட்டு இன்று மட்டும் பல துன்பங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதில் சகோதரன், தந்தை, மகன் மற்றும் கணவன் என குடும்பத்தின் தலைமைகளையும் அன்புக்குரிய உறவுகளையும் இழந்த மக்கள் மீளா துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.
இவ்வாறு, பாதிக்கப்பட்ட மக்களின் பெரும் துன்பமாக காணப்படுவது வறுமை, காரணம் குடும்பத்தில் உழைக்கும் தலைமைகள் தவறியமையினால் வறுமை எனும் பிடியில் மக்கள் சிக்குண்டுள்ளனர்.
அதில் இருந்து மீள முடியாமல் தற்போது வரை கடும் சிரமங்களை அனுபவிக்கும் குடும்பங்கள், ஆண் தலைமைகளை இழந்தமையினால் பெண் தலைமைகளின் செயற்படும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறு போரில் மகனை இழந்து, பெண் ஒருவரின் உழைப்பில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கையை கொண்டு செல்லும் ஒரு குடும்பத்தின் வலியை பகிர்கின்றது இன்றைய என் இனமே என் சனமே நிகழ்ச்சி,
https://www.youtube.com/embed/zw4i0DzBTeM