இந்திய விமானப்படைக்குச் சொந்தமான C-17 சரக்கு விமானம் இன்று (14) பிற்பகல் 3.07 மணிக்கு இந்தியாவின் ஆக்ராவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
நாட்டின் சுகாதார சேவைகளைப் பராமரிப்பதற்காக 25 மெட்ரிக் தொன் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உலர் உணவுப் பொருட்களை இந்த விமானம் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பேரிடர் நிவாரணப் பொருட்கள்
பேரிடர் நிவாரணப் பொருட்கள் விமானத்திலிருந்து தரையிறக்கிய பிறகு, நாட்டின் மஹியங்கனை பகுதியில் ஒரு கள மருத்துவமனையை நடத்தி வந்த 85 மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் அவர்களின் மருத்துவ உபகரணங்களுடன் நாட்டிலிருந்து புறப்பட்டனர்.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜெயதிஸ்ஸவும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து இந்திய மருத்துவமனை ஊழியர்களை வழியனுப்பி வைத்தார்.
இந்த இந்திய மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அத்தியாவசிய அறுவை சிகிச்சைகள் உட்பட 7,000 நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்துள்ளனர்.




