இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா உயிரிழந்தமைக்கு நாம் தான் காரணம் என கூறுவது முற்றிலும் பொய்யானது என கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரும் நாம் அவருடன் நல்ல முறையில் கலந்துரையாடினோம்.
இவ்வாறிருக்க, எங்களால் அவரின் உடல்நலம் குன்றியது எனக் கூறும் விடயங்கள் முற்றிலும் தவறானது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில்,