பிரபாஸ்
நடிகர் பிரபாஸ், எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய பாகபலி படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானவர்.
இப்படத்திற்கு பிறகு அவரது திரை வாழ்க்கையே மாறியது, எந்த ஒரு நடிகரும் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு இந்திய அளவில் அவரது மார்க்கெட் உயர்ந்தது.
ஹெல்மெட் மாட்டிக்கொண்டு கடைக்கு வந்த ரோஹினி மாமா, நிறுத்திய முத்து.. சிறகடிக்க ஆசை புரொமோ
இப்படத்திற்கு பிறகு சாகோ, ராதே ஷ்யாம் என பல பெரிய பட்ஜெட் படங்களில் நடித்தார், ஆனால் அவ்வளவாக படம் ஓடாத நிலையில் அதன்பிறகு நடித்த சலார் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது.
அதேபோல் அவர் நடித்த கல்கி 2898 ஏடி படம் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
புதிய படம்
அடுத்தடுத்து நிறைய பெரிய படங்களில் கமிட்டாகி நடித்துவரும் பிரபாஸ் புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார்.
பிரசாந்த் வர்மா இயக்கத்தில் Hombale Films தயாரிக்கும் புதிய படத்தில் பிரபாஸ் நடிக்க கமிட்டாகியுள்ளாராம். இந்த படம் ஒரு சூப்பர் ஹீரோ கதைக்களத்தை கொண்டு உருவாக உள்ளதாம்.