35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைப்பது தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை இன்றையதினம் (05) அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.
அந் எண்ணிக்கை 30,000 அல்லது 35,000 என்று சொல்ல முடியாது என்றும் பட்டதாரிகள் குழுவில் சிலரை அரச சேவையில் இணைத்துக் கொள்ள முடியாமல் போகும் எனவும் அதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சேர்ப்பு எண்ணிக்கை
எனினும், தற்போதுள்ள வெற்றிடங்களுக்கு முன்னுரிமை அளித்து இந்த ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அரச சேவையில் இணைத்துக் கொள்ள முடியாத பட்டதாரிகள் குழு இருப்பதால் இந்தப் பிரச்சினையைக் கையாள மற்றொரு குழு நியமிக்கப்படும் என்றும், தேவையான ஆட்சேர்ப்புகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு, அதற்கேற்ப எண்ணிக்கை தீர்மானிக்கப்படும் என்றும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.

