கண்டி- வத்தேகம பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் நடைபெற்ற இரவுநேர களியாட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்ட இருவர் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்று (17) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சுகயீனமுற்ற இளைஞனும், யுவதியும் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
களியாட்ட நிகழ்வில் அருந்திய குளிர்பானம் ஒன்றினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக குறித்த இருவரும் இவ்வாறு சுகயீனமுற்றிருக்கலாம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பில் வத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

