கேகாலையில் பாடசாலை மாணவனை தாக்கிய சக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐந்து பேர் கொண்ட மாணவர் குழுவினால் சக மாணவர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டதுடன், ஏனைய இருவரை கைது செய்வதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
16 மற்றும் 17 வயதுடைய மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதல்
கேகாலை, பிட்டிஹும பகுதியிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இடையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவனை மண்டியிட வைத்து கொடூரமாக தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிருக்கான கேகாலை பணியகத்தால் இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நாளையதினம்(27) கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.