ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண தொடரில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 50 ஓட்டங்களால் வெற்றி பெற்று ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ள இந்திய அணியுடன் மோதவுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி அந்த அணி 50 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 362 ஓட்டங்களை குவித்தது.
துடுப்பாட்டத்தில் கலக்கிய நியூஸிலாந்து வீரர்கள்
துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பில் ரச்சின் ரவீந்திரா (Rachin Ravindra) அதிகபட்சமாக 108 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன்(Kane Williamson) 102 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் லுங்கி நெடி(Lungi Ngidi) 03 விக்கெட்டுக்களையும்,ரபாடா (Kagiso Rabada) 02 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இதற்கமைய 363 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 312 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.
இறுதிவரை போராட்டம்
துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் இறுதி வரை போராடிய டேவிட்( David Miller) ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 100 ஓட்டங்களையும் Rassie van der Dussen 69 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் Mitchell Santner 03 விக்கெட்டுக்களையும், Matt Henry மற்றும் Glenn Phillips தலா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இதன்படி எதிர்வரும் 09ஆம் திகதி இந்திய அணிக்கு எதிராக ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி மோதவுள்ளது.