விமானப் பணிப்பெண்கள் மற்றும் பயணிகளிடம் அத்துமீறிய நபரொருவர் விமான நிலையப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் மும்பை விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்த விமானமொன்றில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் யாழ்ப்பாணம் நாகதீபத்தை வசிப்பிடமாகக் கொண்ட 65 வயதான ஒருவர் என்று தெரியவந்துள்ளது.
நீதிமன்றில் முன்னிலை
குறித்த சந்தேகநபர் அதிக போதையில் பயணிகளிடம் அத்துமீறி நடந்து கொண்டதுன், விமானப் பணிப்பெண்களிடமும் தவறாக நடந்துள்ளார்.
இதனையடுத்து விமானம் தரையிறக்கப்பட்டதும் விமான நிலையப் பொலிஸார் குறித்த சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.
இன்றைய தினம் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.