ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட அமைப்பாளர் லக்ஷ்மன் விஜேமான்ன,
ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி, சஜித்தின் ஐக்கிய மக்கள்
சக்தியில்(SJB) இணைந்துள்ளார்.
விஜேமான்ன, இதனை ஊடகங்களிடம் உறுதி செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“ஐக்கிய தேசிய கட்சிக்காகவும் அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்காகவும் நான் என் உயிரைப் பணயம் வைத்தேன்.
ராஜித சேனாரத்ன
இருப்பினும், கட்சி ராஜித சேனாரத்னவை அதன் களுத்துறை மாவட்டத் தலைவராக நியமித்தது. சேனாரத்னவின் ஆலோசனையின் பேரில் அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாகவே, நான் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி ஐக்கிய மக்கள் சக்தியில் சேர முடிவு செய்தேன்” என தெரிவித்துள்ளார்.

