அநுர அரசாங்கம் தாங்கள் தேர்தல் மேடைகளில் கூறிய விடயங்களை தற்போது நிறைவேற்றவில்லை என்ற விமர்சனம் மக்கள் மத்தியிலும் அரசியல்வாதிகள் மத்தியிலும் உள்ளது.
இந்த நிலையில், தற்போது ஆரம்பித்துள்ள படலந்த விசாரணையை கூட ஆரம்பிப்பார்கள் எனினும் அதற்கான தீர்வினை கண்டுப்பிடிப்பார்களா என்பது கேள்விக்குறியே..என்று பொருளாதார ஆய்வாளர் பாலா மாஸ்டர் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்வதற்காகவும், தேர்தலை மையப்படுத்தியே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அநுர அரசாங்கம் வந்தவுடனே மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்சவின் ஊழலை வெளிக்கொண்டு வருவோம், பணத்தை மீட்போம் என்றார்கள், ஆனால் 100 நாட்களாகியும் ஒன்று செய்யவில்லை.
இது ஒரு அரசியல் நகர்வாகவே பார்க்கப்படுகின்றது என்றார்.
இந்த விடயங்கள் தொடர்பில் மேலும் அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு….