முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இரவு நேர களியாட்ட விடுதியில் மோதலில் ஈடுபட்ட யோஷிதவின் குழு: பொலிஸார் வெளியிட்ட தகவல்

கொழும்பு- யூனியன் பிளேசில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதியில் ஏற்பட்ட மோதலுக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவுக்கும் (Yoshitha Rajapaksa) எந்தவித தொடர்பும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலுள்ள விடுதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை (21) இரவு யோசித ராஜபக்ச, அவரது மனைவி உள்ளிட்ட குழுவினர் சென்ற போது அங்க குழப்பம் விளைவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 இதன்போது, இரவு நேர களியாட்ட விடுதிக்கு வெளியில் யோஷித ராஜபக்சவுடன் சென்ற குழுவுக்கும் களியாட்ட விடுதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் அடையாளம்

மோதலின் போது யோஷித ராஜபக்சவுடன் சென்ற குழுவினர் களியாட்ட விடுதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

இதனையடுத்து, கொம்பனி வீதி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தப்பிச் சென்ற சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தின் சந்தேக நபர்கள் தெஹிவளை, அத்திடிய மற்றும் திம்பிரிகஸ்யாய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை

இந்நிலையில், மோதல் ஏற்பட்ட நேரத்தில் யோஷித ராஜபக்சவும் அவரது மனைவியும் சம்பவ இடத்தில் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரவு நேர களியாட்ட விடுதியில் மோதலில் ஈடுபட்ட யோஷிதவின் குழு: பொலிஸார் வெளியிட்ட தகவல் | Yoshitha Rajapaksa Not Involved Night Club Fight

யோஷித ராஜபக்சவும் அவரது மனைவியும் இரவு நேர களியாட்ட விடுதியை விட்டு வெளியேறிய பின்னரே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொம்பனி வீதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.