வெலிக்கடை பிரதேசத்தில் உள்ள கட்டிடம் ஒன்றிலிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
வெலிக்கடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
சந்தேக நபரொருவர் இந்த கைக்குண்டை கட்டிடத்தில் வைத்துச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், இது தொடர்பில் வெலிக்கடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

