அமீரகத்தின் தலைநகரமான ஷார்ஜாவில், இலங்கை போதைப்பொருள் வலையமைப்பிற்கு தொடர்புடைய மற்றொரு சக்திவாய்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் ரஸ்ஸல் என அழைக்கப்படுபவராகும். அவர் குடு அஞ்சுவின் முக்கிய உதவியாளர்களில் ஒருவர் என தெரியவந்துள்ளது.
இலங்கை பிறப்பித்த சிவப்பு பிடியாணையின் அடிப்படையில் இந்தக் கைது செய்யப்பட்டது.
மோசடி வழக்கு
எனினும் இந்தக் கைது தொடர்பான எந்தத் தகவலும் இன்டர்போல் மூலம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரஸ்ஸல் என்ற நபருக்கு எதிரான 80 மில்லியன் ரூபாய்க்கு மேல் மோசடி வழக்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது.

