முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காணாமல் போனோரில் 19 பேர் மீட்பு : வெளியான தகவல்

காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவினால் காணாமல் போனவர்களில் இதுவரையில் 19
பேரை கண்டறிந்துள்ளதாக ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி
தற்பரன் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனோரைக் கண்டறியும் ஆணைக் குழுவின் ஏற்பாட்டில் நல்லூர் பிரதேச
செயலகத்தில் நேற்றைய தினம் (26) ஊடகவியலாளர்களுக்கு இடம்பெற்ற
கருத்தமர்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

காணாமல்போனோரைக் கண்டறியும் செயலகங்களில் இதுவரை 16 ஆயிரத்து 966 பேர் காணாமல்
போயுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 3 ஆயிரத்து 742 பேர்
படையினர் மற்றும் பொலிஸார் என பாதுகாப்பு தரப்பினராக காணாமல் போயுள்ளதாகவும்
பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணைகள்

அதில் 6ஆயிரத்து 449 பேரின் விசாரணைகள் நிறைவு
பெற்றுள்ள நிலையில் , 10 ஆயிரத்து 517 பேர் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று
வருகின்றன.

காணாமல் போனோரில் 19 பேர் மீட்பு : வெளியான தகவல் | Rescue Of 19 Missing Persons In Sri Lanka

2000ஆம் ஆண்டிற்கு பின்பு 7 ஆயிரத்து 406 பேரும், 2000ஆம் ஆண்டிற்குப்
முன்னர் 9 ஆயிரத்து 560 பேரும் காணாமல் போயுள்ளதாக ஆணைக்குழுவில் பதிவு
செய்யப்பட்டுள்ளது.

இதிலே 2000ஆம் ஆண்டிற்குப் பின்னர் காணாமல்போன 7ஆயிரத்து 406 பேரில் 6
ஆயிரத்து 449 பேர் தொடர்பான விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளது.

இடைக்கால நிவாரணம்

நிறைவு பெற்ற விசாரணைகளில் இருந்து 19 பேர் உயிரோடு இருப்பதனையும்
கண்டறிந்துள்ளோம். அவர்களது விபரங்களை 2024 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில்
இணைத்துள்ளோம். அவை விரைவில் வெளிவரும்.

காணாமல் போனோரில் 19 பேர் மீட்பு : வெளியான தகவல் | Rescue Of 19 Missing Persons In Sri Lanka

அதேவேளை 2ஆயிரத்து, 604 பேர் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சான்றிதழ்களை
பெற்றுள்ளனர். 407 பேர் மரணச் சான்றிதழிற்கான சிபார்சை பெற்றுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இடைக்கால
நிவாரணத்திற்கு 4ஆயிரத்து 408 பேர் விண்ணப்பித்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.