பொலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு (Salman Khan) மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மும்பை போக்குவரத்து துறையின் உத்தியோகப்பூர்வ வாட்ஸ் அப் எண்ணுக்கே இந்த மிரட்டல் செய்தி வந்துள்ளது.
குறித்த மிரட்டல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சல்மான் கானை இல்லத்தில் குண்டு வைத்து கொலை செய்து விடுவோம்.
காவல்துறை விசாரணை
அவரின் வாகனத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்து விடுவோம்”என மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இது தொடர்பில் மும்பை காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கடந்த ஆண்டு பொலிவுட் நடிகர் சல்மான் கான் வசிக்கும் மும்பையின் பந்த்ரா இல்லத்துக்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.