இலங்கையில் இஸ்ரேலிய குடிமக்களை அச்சுறுத்தும் மற்றும் சமூக நல்லிணக்கத்தை
சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் இந்த வாரத்தில்,
கொம்பனி வீதியில் கைது செய்யப்பட்ட 23 வயது நபர் பயங்கரவாத தடுப்புச்
சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர் குறித்து இலங்கை
மனித உரிமைகள் ஆணையகத்துக்கு, பயங்கரவாத தடுப்புப் பிரிவு தகவல் அளித்துள்ளது.
72 மணி நேரத்திற்கும் மேலாக
இதனையடுத்து, கைதியின் நிலைமை மற்றும் நல்வாழ்வை கண்காணித்து வருவதாக மனித
உரிமைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் பிரிவு 7.1 இன் கீழ் தடுத்து
வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சட்டம், 72 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட காலம் ஒருவரை காவலில் வைக்க
அனுமதிக்கிறது.
இந்த நிலையில், பொலிஸ் தரப்பு இது தொடர்பில் தகவல் எதனையும் வெளியிடவில்லை.