முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யுத்தத்தினால் அங்கவீனமானவர்களுக்கு இந்தியாவில் பொருத்தப்பட்ட செயற்கை அவயவங்கள்

மாற்று வலுவுடையவர்களுக்கான செயற்கை அவயவங்களைப் பொருத்தும் செயற்றிட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 20 பயனாளர்களுக்கு இந்தியாவில் (India) செயற்கை அவயங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக (University of Jaffna) பொறியியல் பீடத்தால் முன்னெடுக்கப்படும் குறித்த செயற்திட்டத்தின் மூலம் கடந்த புதன்கிழமை இருபது பேரும் யாழ்ப்பாணத்தில் (Jaffna) இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டு சென்று சிறப்பு செயற்றிட்ட முகாம் ஒன்றில் பங்கெடுத்ததுடன், அங்கு அவர்களுக்கான செயற்கை அவயவங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இருபது பயனாளிகளும் நேற்று (09.03.2025) ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

செயற்கை அவயவங்கள்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அங்கவீனர்களாக்கப்பட்டவர்களுக்கு செயற்கை அவயவங்களை வழங்குவதே இச்செயற்றிட்டத்தின் நோக்கமாகும்.

யுத்தத்தினால் அங்கவீனமானவர்களுக்கு இந்தியாவில் பொருத்தப்பட்ட செயற்கை அவயவங்கள் | Project To Fit Artificial Limbs For Thedifferently

குறித்த செயற்றிட்டமானது யாழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கே.செல்வகுமாரினால் ஆரம்பிக்கப்பட்டதுடன், Canada Fund for Local Initiative மற்றும், Canada Sri Lanka Business Convention ஆகிய அமைப்புகளால் நிதி வழங்கப்படுகிறது.

மேலும் இச்செயற்றிட்டத்தின் முதல் கட்டம் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பேராசிரியர் செல்வகுமார், குறித்த செயற்றிட்டத்துக்கு இடையூறாக எவரும் செயற்பட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை குறித்த செயற்றிட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த பயனாளர்கள்,இந்த செயற்றிட்டத்தின் மூலம் எமக்கு பெரிய உதவி கிடைத்துள்ளது. இதனை ஏனையவர்களும் பயன்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.