திக்கோவிட்ட துறைமுகத்தில் 191
கிலோ 752 கிராம் ஹெரோயின் மற்றும் 671 கிலோ 452 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும்
நெடுநாள் கடற்றொழில் கப்பல் சோதனையிடப்பட்டது.
திக்கோவிட்ட துறைமுகத்திற்கு குறித்த நெடுநாள் கடற்றொழில் கப்பல் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலதிக சட்ட நடவடிக்கை
பொலிஸ் போதைப்பொருள்
ஒழிப்பு பணியகத்தின் நிபுணத்துவ அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட மேலதிக
சோதனையின் போது மிக நுணுக்கமாக மறைத்து நாட்டிற்கு கொண்டு வர முயற்சித்த போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
சந்தேக நபர்கள் மற்றும் நெடுநாள்
கடற்றொழில் படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள்
ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.