குட் பேட் அக்லி
2025ம் ஆண்டு இதுவரை தமிழ் சினிமாவில் வெளிவந்த திரைப்படங்களில் குட் பேட் அக்லி அதிக வசூலை செய்துள்ளது.
அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தனர். த்ரிஷா, சுனில், பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அர்ஜுன் தாஸ் வில்லனாக நடித்திருந்தார்.
டென் ஹவர்ஸ் திரைவிமர்சனம்
ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
பாக்ஸ் ஆபிஸ்
இந்த நிலையில் 9 நாட்களை காத்திருக்கும் குட் பேட் அக்லி படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 9 நாட்களில் ரூ. 218 கோடி வசூல் செய்துள்ளது.