அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஆலோசகர்களாக உள்ள எலோன் மஸ்க் மற்றும் பீட்டர் நவரோ ஆகியோருக்கு இடையில் மோதல் போக்கு நிலவுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பீட்டர் நவரோ, எலோன் மஸ்க்கின் மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா குறித்து தவறான முறையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இதனையடுத்து, நவரோ ஒரு முட்டாள் என மஸ்க் கூறினார்.
சிறு வணிகங்கள் பாதிப்பு
குறித்த இருவருக்கும் இடையிலான சண்டை, ட்ரம்ப்பின் வட்டத்திற்குள் சிறிய பிளவை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, டொனால்ட் ட்ரம்பின் புதிய வரிக் கொள்கை தொடர்பில் அமெரிக்கர்கள் இரட்டை நிலைப்பாட்டில் உள்ளனர்.
சிலர் ட்ரம்பை ஆதரிக்கும் அதேவேளை, சிலர் அவருக்கெதிராக போராட்டங்களிலும் களமிறங்கியுள்ளனர்.
ட்ரம்ப், தற்போது சீன இறக்குமதிகள் மீது 145 சதவீத வரியை விதித்துள்ளதால், சீனாவின் பொருட்களை நம்பியிருக்கும் அமெரிக்காவின் சிறு வணிகங்கள் பாதிப்படைய தொடங்கியுள்ளன.