பாடசாலை மாணவர்களுக்கு காலணி வாங்குவதற்கான வழங்கப்படும் ரூ.6000 மதிப்புள்ள வவுச்சருக்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.
அது குறித்த அறிவிப்பு இன்று (20) கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
நீடிக்கப்பட்ட காலம்
இதன்படி, காலணி வாங்குவதற்கான வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு இதற்கு முன்னதாக வெளியிட்டிருந்த அறிவிப்பின் படி, வவுச்சரின் செல்லுபடியாகும் எதிர்வரும் (மார்ச்) 31 ஆம் திகதியுடன் நிறைவடைய இருந்தமை குறிப்பிடத்தக்கது.