விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் நான்காவது மறுஆய்வு குறித்து,
இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள்
அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துள்ளன.
பேச்சுவார்த்தைகள் தற்போது அமெரிக்காவின்(USA) வோசிங்டனில் இடம்பெற்று வருகின்றன.
சர்வதேச நாணய நிதியம்
இலங்கையின் நிதி அமைச்சகம் மற்றும் மத்திய வங்கியின் அதிகாரிகள் அடங்கிய குழு
பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க அமெரிக்காவுக்கு சென்றுள்ளது.
இதனை பிரதி நிதியமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக மூன்று மதிப்பாய்வுகளில் இலங்கை தேர்ச்சிப் பெற்று சர்வதேச நாணய
நிதியத்தின் நிதியளிப்பையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.