கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோவின் அமெரிக்க விசாவை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் இரத்து செய்துள்ளது.
அமெரிக்காவில் நடைபெறவுள்ள சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக தயாரான நிலையில், இவ்வாறு விசா இரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொலம்பிய நிதி அமைச்சர் ஜெர்மன் அவிலா குறித்த கூட்டங்களில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முதல் இடதுசாரி ஜனாதிபதி
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவிலிருந்து சட்டவிரோத புலம்பெயர் மக்களுடன் சென்ற இரண்டு விமானங்கள் தரையிறங்க கொலம்பிய அரசாங்கம் அனுமதிக்கவில்லை.

இதனையடுத்து, கொலம்பிய அரசாங்கம் இதற்கு பதிலளிக்க நேரிடும் என ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே, இந்த விசா இரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோ, கொலம்பியாவின் முதல் இடதுசாரி ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

