சமீபத்தில், OpenAI தலைமை நிர்வாக அதிகாரி சாம் எல்ட்மேன் கூறிய ஒரு கூற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ChatGPT இன் AI சாட்போட்களுக்கு “தயவுசெய்து” மற்றும் “நன்றி” என்று பணிவுடன் கூறுபவர்களால் தனக்கு நிறைய செலவாகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
செட் ஜிபிடியின் செலவு
ஓபன் ஏஐ துறையைப் பொறுத்தவரை இப்போது செட்ஜிபிடி தான் முன்னிலை வகித்து வருகிறது.
I wonder how much money OpenAI has lost in electricity costs from people saying “please” and “thank you” to their models.
— tomie (@tomieinlove) April 15, 2025
ஏஐ துறையில் அவர்கள் கொண்டு வரும் அப்டேட்ஸ்கள் பயனாளர்களை கவரும் வகையில் கொண்டு வரப்படுகிறது.
இதனால் செட்ஜிபிடி பயனாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதேநேரம் பயனாளர்கள் செய்யும் சில வேலைகளால் செட் ஜிபிடியின் செலவும் அதிகரித்து வருகிறதாம்.
Please, Thank You
இந்நிலையில், நாம் செட் ஜிபிடியிடம் பொதுவாகக் கேள்விகளுடன் சேர்த்து அனுப்பும் ப்ளீஸ் மற்றும் தேங் யூ உள்ளிட்ட வார்த்தைகளால் செட்ஜிபிடிக்கு பல மில்லியன் டொலர் செலவாவதாக ஓபன் ஏஐ தலைவர் சாம் எல்ட்மேன் தெரிவித்துள்ளார்.
மேலும், பதில்கள் தருவது இயந்திரம் என்பதால் அதற்கு Please, Thank You போன்ற மரியாதைகள் தேவையில்லை.
இதற்கென குறிப்பிட்ட மின்னாற்றல் தேவைப்படுவதால் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.