ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடி கண்டனம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.
இந்தியா – பாகிஸ்தான்
இந்த தாக்குதலுக்கு லஷ்கர் -இ-தொய்பா ஆதரவு அமைப்பான டிஆர்எப் பொறுப்பேற்றது.

குறித்த தாக்குதல் நடத்திய தரப்பினரில் 2 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இரு தரப்பிலும் பரஸ்பரம் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீரை வழங்கும் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.
பதிலுக்கு, பாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க தடை உள்ளிட்ட தடைகளை பாகிஸ்தானும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

