யாழ்ப்பாணம் (Jaffna) – திருச்சிராப்பள்ளி (திருச்சி) இடையிலான நேரடி விமான சேவை இன்று முதல் ஆரம்பமாகிறது.
47 ஆண்டுகளுக்குப் பின்னர் திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமான
சேவை இயக்கப்படுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த விமான சேவையை இண்டிகோ (Indigo) நிறுவனம் இயக்குகிறது.
விமான சேவை
அதன்படி, திருச்சியில் இருந்து இன்று (30.03.2025) பிற்பகல் 1.25 மணிக்கு புறப்படும் விமானம் ஒரே ஒரு
மணிநேரத்தில் பிற்பகல் 2.25 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும் என தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம், யாழ்ப்பாணத்தில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 4.05
மணிக்கு திருச்சிக்கு வந்து சேரும் என கூறப்படுகின்றது.

இதுவரை திருச்சியில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்குதான் நாள்தோறும் 2
விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்வோர் இந்த விமான சேவைகளை பயன்படுத்தி வந்தனர்.
இதற்கு அதிகமான கட்டணமும் செலுத்தி வந்தனர்.
விமான கட்டணம்
இந்நிலையில், திருச்சி – யாழ்ப்பாணம் இடையேயான விமான கட்டணமும் அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருச்சியில் இருந்து யாழ்ப்பாணம் செல்ல மட்டும் ரூ5,900 முதல் ரூ6,400 வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானம் இன்றையதினம் (30) பிற்பகல் 02.02 மணிக்கு பலாலி விமான நிலையத்தை வந்தடைந்த
விமானத்தில் 27 பணிகள் வருகை தந்துள்ளனர்.
விமானிகளுக்கு வரவேற்பு
அதனை தொடர்ந்து, பலாலியிலிருந்து மீண்டும் 36 பயணிகளுடன் 3.00 மணியளவில் விமானம் திருச்சியை
நோக்கிப் புறப்பட்டுள்ளது.

மேலும், யாழ்ப்பாண இந்திய துணை தூதுவர் சாய் முரளி தலையிலான குழுவினர் கேக்
வெட்டி விமானிகளுடன் புதிய விமான பயணத்தினை வரவேற்றுள்ளனர்.

