பிரபல பாதாள உலகக்கும்பல் புள்ளிகளில் ஒருவரான லொக்கு பெட்டி {Loku Pety} என்றழைக்கப்படும் சுஜீவ ருவன் குமார டி சில்வா, நாளை இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளார்.
கடந்த வருடம் ஐரோப்பாவின் பெலாரஸ் நாட்டில் வைத்து அந்நாட்டுப் பொலிஸாரினால் லொக்கு பெட்டி கைது செய்யப்பட்டிருந்தார்.
அதனையடுத்து, அங்கிருந்து அவர் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் பரவியிருந்த நிலையில், அந்நாட்டுப் பொலிஸார் அதனை மறுத்திருந்தனர்.
பெலாரஸ் சென்ற குழு
இந்நிலையில், கடந்த வாரம் லொக்கு பெட்டியை உத்தியோகபூர்வமாக கையேற்று அழைத்து வருவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று பெலாரஸ் சென்றிருந்தது.

அதன் பிரகாரம், நாளைய தினம் லொக்கு பெட்டி, இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

