முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

போர் பதற்றம்…! பதிலடி கொடுப்போம் – பாகிஸ்தானை எச்சரிக்கும் பிரதமர் மோடி

புதிய இணைப்பு

பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டால் வலுவான பதிலடி கொடுக்கப்படும் என இந்திய பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.

பாகிஸ்தான் சுட்டால் நாங்களும் சுடுவோம், தாக்கினால் நாங்களும் தாக்குவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி.வான்ஸிடம் தொலைபேசியில் பேசிய போதே பிரதமர் மோடி இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார்.  

இந்தியா பதிலடி

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை. இயல்பு நிலையில்தான் இருக்கிறது.

போர் பதற்றம்...! பதிலடி கொடுப்போம் - பாகிஸ்தானை எச்சரிக்கும் பிரதமர் மோடி | India Launches Drone Attacks Air Bases In Pakistan

இந்த விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா ஏற்காது. எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு இந்தியா பதிலடி கொடுப்பதில் புதிய வழக்கம் ஏற்பட்டுள்ளது.

இனி எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு பாகிஸ்தான் அதிக விலை கொடுக்க நேரிடும்.

மேலும், தீவிரவாதிகளை ஒப்படைப்பது குறித்து பேசினால் பேசுவதற்கு தயார் என்று கூறியுள்ளார்.

நான்காம் இணைப்பு

ஒப்பரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை என்று இந்திய விமானப்படை (Indian Air Force
) அறிவித்துள்ளது.

குறித்த விடயத்தை இந்திய விமானப்படையின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

ஆபரேசன் சிந்தூரில், இந்திய விமானப்படை தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை துல்லியமாகவும், தொழில்முறையுடனும் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.   

மூன்றாம் இணைப்பு

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தீர்வை எட்டுவதற்கு மத்தியஸ்தம் செய்ய தயார் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

போர் பதற்றம்...! பதிலடி கொடுப்போம் - பாகிஸ்தானை எச்சரிக்கும் பிரதமர் மோடி | India Launches Drone Attacks Air Bases In Pakistan

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தனது பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில்,

“இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வலிமையான மற்றும் அசைக்க முடியாத சக்திவாய்ந்த தலைமையைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

மத்தியஸ்தம் செய்ய தயார் 

இந்த வரலாற்று மற்றும் வீரமிக்க முடிவை எட்ட அமெரிக்கா உங்களுக்கு உதவ முடிந்தது என்பதில் நான் பெருமைப்படுகிறேன்.

போர் பதற்றம்...! பதிலடி கொடுப்போம் - பாகிஸ்தானை எச்சரிக்கும் பிரதமர் மோடி | India Launches Drone Attacks Air Bases In Pakistan

விவாதிக்கப்படாவிட்டாலும், இந்த இரண்டு பெரிய நாடுகளுடனும் வர்த்தகத்தை கணிசமாக அதிகரிக்கப் போகிறேன்.

ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் தொடரும் காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக ஒரு தீர்வை எட்ட முடியுமா என்பதைப் பார்க்க உங்கள் இருவருடனும் நான் இணைந்து பணியாற்றுவேன் என்று பதிவிட்டுள்ளார். 

இரண்டாம் இணைப்பு  

தாக்குதல்களை நிறுத்துவதற்கு தயாராகவுள்ளதாக பாகிஸ்தான்  துணை பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான இஷாக் தார் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முதலாம் இணைப்பு 

பாகிஸ்தானில் (Pakistan) உள்ள 3 விமானப்படை தளங்களை குறி வைத்து இந்தியா இன்று தாக்குதல் நடத்தியதாக இந்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படைத்தளம், பஞ்சாப் சார்கோர்ட்டில் உள்ள ரபீக் விமானப்படைத்தளம், இஸ்லாமாபாத்தின் முடீர் பகுதியில் உள்ள விமானப்படைத்தளத்தை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமானங்கள் பறக்க தடை

பெரும்பாலான ஏவுகணைகள்’ இடைமறிக்கப்பட்டது ‘எந்த இராணுவ தளங்களும்’ சேதமடையவில்லை என்று பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் அகமது ஷெரீப் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

போர் பதற்றம்...! பதிலடி கொடுப்போம் - பாகிஸ்தானை எச்சரிக்கும் பிரதமர் மோடி | India Launches Drone Attacks Air Bases In Pakistan

அத்துடன், தங்கள் நாட்டு வான்பகுதியை பாகிஸ்தான் தற்காலிகமாக மூடியுள்ளது. வான் பரப்பில் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை 3.10 முதல் மதியம் 12 மணிவரை வான் எல்லை மூடப்படுவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இஸ்லாமாபாத்தின் எரிபொருள் நிலையங்கள் இன்று காலை 6 மணி முதல் 48 மணி நேரம் மூடப்படும் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தை எச்சரிக்கும் இந்தியா

பற்றி எரியும் போர் சூழ்நிலையில், பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டொலர் கடன் தொகைக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி அளித்துள்ளது.

போர் பதற்றம்...! பதிலடி கொடுப்போம் - பாகிஸ்தானை எச்சரிக்கும் பிரதமர் மோடி | India Launches Drone Attacks Air Bases In Pakistan

கடன் வழங்க இந்தியா எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் சர்வதேச நிதியத்தின் நிர்வாக குழு கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதேவேளை, பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் தொடர்ச்சியான நிதியுதவி ராணுவ நோக்கங்களுக்காகவோ அல்லது அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதத்திற்காகவோ பயன்படுத்தப்படுவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தை இந்தியா எச்சரித்துள்ளது. 

https://www.youtube.com/embed/qcnlZRAIB34

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.