முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

22 கஜமுத்துகளுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இரு வியாபாரிகள் கைது

மட்டக்களப்பு ஏறாவூரில் பல இலட்சம் ரூபா பெறுமதியான தடைசெய்யப்பட்ட 22
கஜமுத்துக்களுடன் 57 வயதுடைய முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இரு
வியாபாரிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது
நேற்றையதினம் (21) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிடைத்த தகவல்

மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மாவட்ட சிரேஸ்ட
பொலிஸ் அத்தியட்சகர் ஆலோசனைக்கமைய மாவட்ட குற்ற
விசாரணைப் பிரிவு பொலிஸ் பரிசோதகர் தலைமையிலாக குழுவினர் சம்பவதினமான
நேற்று காலை 11.00 மணியளவில் ஏறாவூர் பிரதேசத்தில் வீதி ஒன்றில் கண்காணிப்பில்
ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

22 கஜமுத்துகளுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இரு வியாபாரிகள் கைது | Two Arrested With 22Kg Sea Cucumbers

இதன் போது குறித்த நபர் தடைசெய்யப்பட்ட யானை தந்தத்தின் பாகமான 4
கஜமுத்துக்களை எடுத்து வந்து வியாபாரத்தில் ஈடுபட்டபோது அங்கு மாறு வேடத்தில்
இருந்த பொலிஸார் சுற்றிவளைத்து அவரை கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணை

இதனையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட
முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தருக்கு கஜமுத்துக்களை விற்பனை செய்த அம்பாறை
சாய்ந்தமருதைச் சேர்ந்த 57 வயதுடைய கட்டிட ஒப்பந்தகார் ஒருவரை 18
கஜமுத்துக்களுடன் ஏறாவூரில் வைத்து மாலை 5.00 மணிக்கு கைது செய்துள்ளனர்.

22 கஜமுத்துகளுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இரு வியாபாரிகள் கைது | Two Arrested With 22Kg Sea Cucumbers

இதில் கைது செய்யப்பட்டவர் ஏறாவூரைச்சேர்ந்த 57 வயதுடையவர் எனவும் இவர்
கடந்த 2005 ம் ஆண்டில் பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டவர் எனவும்
இவர்கள் இருவரையும் தொடர்ந்து விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த
நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர் மேற்கொண்டு
வருகின்றனர்.

மேலதிக தகவல் கஜிந்தன்

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்