கிளிநொச்சியில் அரச பேருந்து வாகனமொன்றுடன் மோதி விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் கிளிநொச்சி உமையாள் புரத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொழும்பில் இருந்து காங்கேசன்துறை வந்த அரச பேருந்தானது கிளிநொச்சி உமையாள் புரத்தில் வாகனம் ஒன்றை முந்தி செல்வதற்கு முயற்சித்த போது விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இவ்விபத்தின் போது பேருந்து மற்றும் வாகனத்தில் வந்த நபர்களுக்கும் எந்த சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனம் மட்டும் பாரியளவு சேதத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

