முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ட்ரம்பின் உத்தரவால் பெல்ஜியம் இளவரசிக்கு வந்த சிக்கல்

அமெரிக்காவின்(USA) ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மீது ட்ரம்ப் நிர்வாகம் விதித்திருக்கும் தடையால் பெல்ஜியம் நாட்டின் இளவரசியும், வருங்கால ராணியுமான எலிசபெத் (வயது 23) தனது படிப்பை தொடருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

389 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பல்கலைக்கழகமான அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஜனாதிபதி ட்ரம்புக்கு எதிராக செயல்படுவதால் தொடர்ந்து இன்னல்களுக்கு உள்ளாகி வருகிறது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகம்

வளாகத்தில் நடக்கும் மாணவர் போராட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று ட்ரம்ப் பல்கலைக்கழகங்களைக் கோரியிருந்தார்.

ஆனால் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அதை ஏற்க மறுத்தது.

this-princess-is-also-worried-about-trump

எனவே அதற்கு சேர வேண்டிய 2.2 பில்லியன் டொலர் மானியங்களையும் 60 மில்லியன் டொலர் ஒப்பந்தங்களையும் ட்ரம்ப் அதிரடியாக நிறுத்தினார்.

வெளிநாட்டு மாணவர்களை பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு ட்ரம்ப் நிர்வாகம் தடை விதித்தது.

 ட்ரம்ப் நிர்வாகம்

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டில் இருந்து ஆண்டுக்கு சுமார் 800 பேர் சேர்ந்து பயின்று வரும் நிலையில், ட்ரம்ப்(Trump) அரசின் இந்த நடவடிக்கை பல்கலைக்கழகத்திற்கு நெருக்கடியாக அமைந்தது.

Future queen caught up in Trump

இந்த உத்தரவை எதிர்த்து ஹார்வர்ட் பல்கலைக்கழகம் நீதிமன்றத்தை நாடியது.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் ட்ரம்பின் உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில், பெல்ஜியம் நாட்டின் இளவரசியும், வருங்கால ராணியுமான எலிசபெத் (வயது 23) ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.

அவர் முதலாம் ஆண்டு படிப்பை முடித்துள்ளார்.

பெல்ஜியம் இளவரசி

தற்போது ட்ரம்ப் நிர்வாகத்தின் உத்தரவால் இளவரசி எலிசபெத் தனது படிப்பை தொடருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Will Trump deport Belgium

இதுதொடர்பாக பெல்ஜிய அரச அரண்மனையின் செய்தித் தொடர்பாளர் லோர் வாண்டூர்ன் கூறும்போது,

“இளவரசி எலிசபெத் தனது முதலாம் ஆண்டு படிப்பை முடித்துள்ளார்.

டிரம்ப் நிர்வாகத்தின் முடிவின் தாக்கம் வரும் நாட்களில் தெளிவாகும்.

தற்போது நிலைமையை ஆராய்ந்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.