நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களின் 16 பொறுப்பதிகாரிகளுக்கு, உடனடி
இடமாற்றங்களை இலங்கை பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, தேசிய பொலிஸ் ஆணையத்தின் ஒப்புதலுடன் இந்த
இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
உடனடியாக நடைமுறைக்கு..
இதன்படி, அவை உடனடியாக நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்தள,தங்காலை, வாதுவ, நிந்தவூர், பன்சியகம, கிளிநொச்சி, பொத்தபிட்டி, கம்பொல,
தர்மபுரம், கலன்பிந்துனுவேவ ஆகிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளே
மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இடமாற்றங்கள்
இதனை தவிர, பொலிஸின் சட்டப்பிரிவு உட்பட்ட பல முக்கிய பிரிவுகளைச் சேர்ந்த
பொலிஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் அண்மைக்காலமாக தொடர்ந்தும் பொலிஸ் தரப்பில் பல்வேறு இடமாற்றங்கள்
இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

