12 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதை தடுப்பதற்கான உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையொப்பமிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பை முன்னிட்டு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது.
எதிர்வரும் 9ஆம் திகதி முதல்
இதன்படி ஆப்கானிஸ்தான், மியன்மார், சாட், கொங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹெய்ட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் யேமன் ஆகிய நாடுகளின் பிரஜைகளுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
#BREAKING US President Donald Trump has signed a new travel ban blocking people from 12 countries to “protect Americans from dangerous foreign actors”, the White House says.
The ban targets nationals of Afghanistan, Burma, Chad, Republic of the Congo, Equatorial Guinea, Eritrea,… pic.twitter.com/q7ZiCX8nSD
— AFP News Agency (@AFP) June 5, 2025
மேலும் கியூபா மற்றும் வெனிசுவேலா உள்ளிட்ட 7 நாடுகளின் பிரஜைகளுக்கு அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு கட்டுப்பாட்டுகளுடன் கூடிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 9ஆம் திகதி முதல் இந்த தடை நடைமுறைக்கு வரும் என வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது.

