முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அஸாத் மௌலானா குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்

அஸாத் மௌலானா (Azad Maulana)  என்பவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அந்த செயற்பாடுகளுக்கு தடையேற்படும் என்ற காரணத்தால் குறித்த விடயங்கள் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்த முடியாது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று (05) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன (Kavinda Jayawardena) முன்வைத்த கேள்விகளுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சு இவ்வாறு பதிலளித்துள்ளது.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் அஸாத் மௌலான என்ற நபர் சனல் -04 அலைவரிசைக்கு 2023.09.09 ஆம் திகதியன்று அறிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு 

இந்த அறிக்கையால் சமூகத்தில் பாரிய கருத்தாடல் தோற்றம் பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.

அஸாத் மௌலானா குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல் | Asad Maulana Mastermind Of Easter Sunday Attacks

குறித்த விடயம் தொடர்பில் சமூக மற்றும் சமாதான மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அருட்தந்தை ரொஹான் சில்வா குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் அளித்த முறைப்பாடு தொடர்பில் கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அஸாத் மௌலானா என்ற நபரை இலங்கைக்கு அழைத்து வந்து, அடுத்தக்கட்ட நடவடிகைகளை மேற்கொள்வதற்கு இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த செயன்முறைக்கு தடை ஏற்படும் என்ற காரணத்தால் தற்போது அது தொடர்பான தகவல்களை வெளிப்படுத்த முடியாது.” என தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.