முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிஐடி கட்டுப்பாட்டுக்குள் வந்த வவுனியா சிறைச்சாலை

குற்றப்புலனாய்வுப் பிரிவினர், (CID) வவுனியா (Vavuniya) சிறைச்சாலைக்கு வருகை தந்து திடீர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இன்றைய தினம் (12.06.2025) சிறைச்சாலைக்குள் நுழைந்த சிஐடி குழுவினர் வவுனியா சிறைச்சாலையை சோதனை செய்துள்ளதுடன், அங்கு தங்கியிருந்து கடமையில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் உள்ளிட்ட சிறைச்சாலையில் பணியாற்றும் பத்திற்கு மேற்பட்டவர்களை விசாரணைக்காக அனுராதபுரம் (Anuradhapura) அழைத்துச் சென்றுள்ளனர்.

அனுராதபுரம் சிறைச்சாலை

முன்னதாக அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் ஜனாதிபதி பொது மன்னிப்பின் பேரில் சட்டவிரோதமாக விடுவிக்கப்படமை தற்போது நாட்டில் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிஐடி கட்டுப்பாட்டுக்குள் வந்த வவுனியா சிறைச்சாலை | Cid Storms Into Vavuniya Prison

இதேவேளை, சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் காமினி பி. திசாநாயக்க தனது பதவி விலகல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் தனது பதவி விலகல் கடிதத்தை சிறைச்சாலைகள் பதில் ஆணையாளரிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியின் மன்னிப்பை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதியொருவர் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் பதவி விலகுவதாக தெரிவித்து பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

https://www.youtube.com/embed/YPI3gVZFm2Q

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்