ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் இரசாயன சேமிப்பு நிலையத்தில் கசிவு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திடமிருந்து தகவல் கிடைத்ததை தொடர்ந்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து கசிவு தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தீயணைப்புத் துறையில் இரசாயனங்களைக் கையாளும் அதிகாரிகள் பின்னர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து இரசாயனங்களை பாதுகாப்பாக அகற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
சம்பவ இடத்தில் இருந்த ஆபத்து தற்போது
சீரமைக்கப்பட்டுள்ளதாகவும்
கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இந்த இரசாயனங்கள் கசிவுக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது .

