முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தெஹிவளை மிருகக்காட்சிசாலை பெயரில் இடம்பெறும் மோசடி குறித்து எச்சரிக்கை

 தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பெயரில் செயல்பட்டுவரும் போலி சமூக ஊடகக் கணக்கு தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் (CID) அதிகாரபூர்வமாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், மிருகக்காட்சிசாலை நிர்வாகம் உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளது.

முறைப்பாட்டின் படி, தெஹிவளை மிருகக்காட்சிசாலை – இலங்கையின் தேசிய மிருக்கக்காட்சிசாலை “Dehiwala Zoo – Sri Lanka National Zoo” என்ற பெயரில் உள்ள ஒரு பொய்யான ஃபெஸ்புக் கணக்கின் ஊடாக பொதுமக்களிடம் பணம் வசூலிக்க முயற்சிக்கிறது.

தெஹிவளை மிருகக்காட்சிசாலை பெயரில் இடம்பெறும் மோசடி குறித்து எச்சரிக்கை | Dehiwala Zoo Lodges Complaint With Cid

அந்தக் கணக்கு, தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் ஆண்டு விழாவையொட்டி பரிசுகள் வழங்கும் போட்டிகள் நடத்துகிறோம் எனக் கூறி, பலரிடம் பணம் கேட்டு ஏமாற்றியதாக புகார் உள்ளது.

இக்கணக்குடன் தங்களுக்குச் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும், இது தங்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சி எனவும் தெஹிவளை மிருகக்காட்சிசாலை நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

இந்த போலி செயற்பாட்டால் ஏற்படும் நஷ்டம் குறித்து தீவிர கவலை வெளியிடுவதாக தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் ஆர்.சி. ராஜபக்ஷ, தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களை ஏமாற்றும் இந்த நிதி மோசடியை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் CID உடனடியாக விசாரித்து, தேவையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்