நாடாளுமன்றத்தின் நான்கு உறுப்பினர்கள் இன்றைய தினம்(28) கொழும்பில் மின்தூக்கியொன்றில் சிக்கி பத்திரமாக மீட்கப்பட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் சமிந்திரானி கிரியெல்ல, சித்ரால் பெர்னாண்டோ, சதுர கலப்பத்தி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நிலந்தி கொட்டஹச்சி ஆகியோரே இவ்வாறு மின்தூக்கியில் சிக்கிச் கொண்டுள்ளனர்.
பத்திரமாக மீட்பு
கொழும்பில் பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற பயிலரங்கு ஒன்றில் கலந்து கொண்டு திரும்பிச் செல்லும்போது மேற்குறித்த சம்பவத்துக்கு அவர்கள் முகம் கொடுத்துள்ளனர்.
அதனையடுத்து பண்டாரநாயக்க மாநாட்டு மண்டப ஊழியர்கள் , மேற்குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களை பத்திரமாக மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.