கிண்ணியாவில் 12420 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை, விற்பனை செய்வதற்காக உடமையில் வைத்திருந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நேற்றிரவு(09.07.2025) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிண்ணியா – மகரூப் பிரதேசத்தை சேர்ந்த, 57 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு கைது
செய்யப்பட்டவராவார்.
மேலதிக நடவடிக்கை
கிண்ணியா பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற, இரகசிய தகவலின்
அடிப்படையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என கிண்ணியா
குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலதிக நடவடிக்கைகளுக்காக, சந்தேகநபரை நாளையதினம்(10) திருகோணமலை நீதவான்
நீதிமன்றத்தில்
முன்னிலைபடுத்தவுள்ளதாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் கூறியுள்ளார்.

