க.பொ.த சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரு கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளில் கிளிநொச்சி மகாவித்தியாலயம் முன்னணியில் உள்ளதாக தெரியவருகிறது.
அந்த வகையில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 23 பேர் 9ஏ
சித்திகளைப் பெற்றுள்ளதாக பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சிறப்பு சித்தி பெற்ற மாணவர்கள்
16 மாணவர்கள் 8ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
8 மாணவர்கள் 7ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

14 மாணவர்கள் 6ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
7 மாணவர்கள் 5ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
225 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்த நிலையில், அவர்களுள் 220 பேர்
சித்தியடைந்துள்ளதுடன், 68 மாணவர்கள் அதி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.

