முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உச்சகட்ட முறுகலில் ட்ரம்ப் – புடின் – அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு

ரஷ்யாவுக்கு (Russia) எதிராக 100% “இரண்டாம் நிலை வரிகள்” (secondary tariffs) விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.

50 நாட்களுக்குள் உக்ரைன் – ரஷ்யா இடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்படா விட்டால் இந்த வரிகள் நடைமுறைப்படுத்தப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்,

இன்று (14) வெள்ளை மாளிகையில் நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டுடனான சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தகம் செய்ய முடியாது

இந்த வரிகள், ரஷ்ய எண்ணெய், இயற்கை எரிவளி, யுரேனியம் உள்ளிட்ட பொருட்களை வாங்கும் நாடுகளுக்கு எதிராக விதிக்கப்படும்.

உச்சகட்ட முறுகலில் ட்ரம்ப் - புடின் - அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு | Trump Threatens 100 Percent Tariffs On Russia

இதனால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய முடியாது என்று டிரம்ப் கூறினார்.

இந்தியா (2024 இல் 35% ரஷ்ய எண்ணெய் இறக்குமதி), சீனா (19%), மற்றும் துருக்கி (2023இல் 58% பதப்படுத்தப்பட்ட பெட்ரோலிய இறக்குமதி) போன்ற நாடுகள் இதனால் பாதிக்கப்படலாம்.

உக்ரைனில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆர்வம் காட்டவில்லை என என குற்றம் சாட்டியுள்ளார்.

வான் பாதுகாப்பு அமைப்பு

இதனால், அமெரிக்கா (USA) உக்ரைனுக்கு பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்பும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.

உச்சகட்ட முறுகலில் ட்ரம்ப் - புடின் - அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு | Trump Threatens 100 Percent Tariffs On Russia

அமெரிக்கா இந்த அமைப்புகளை நேட்டோவிற்கு அனுப்பும் என்றும், பின்னர் அவற்றை உக்ரைனுக்கு வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புடின் மீது கடும் அதிருப்தியில் உள்ள அமெரிக்க ஜனாதிபதி ரஷ்ய படைகளை எதிர்த்து போராட உதவும் வகையில் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்